நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே
நன்றி சொல்லி மகிழுவேன் இன்றைக்கே
நடப்பதெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே
நன்றி சொல்லி மகிழுவேன் இன்றைக்கே
நன்றி (2) எல்லாம் நன்மைக்கே நன்றி
1.
தீமைகளை நன்மையாக மாற்றினீர்
துன்பங்களை இன்பமாக மாற்றினீர் நன்றி – நடந்ததெல்லாம்
2.
சிலுவைதனை அனுமதித்தீர் நன்றி
சிந்தைதனை மாற்றினீர் நன்றி – நடந்ததெல்லாம்
3.
உள்ளான மனிதனை புதிதாக்கி
உடைத்து உருமாற்றி நடத்துகிறீர் – நடந்ததெல்லாம்
4.
என் கிருபை உனக்குப் போதும் என்றீர்
பெலவீனத்தில் பெலன் என்றீர் – நடந்ததெல்லாம்
5.
தாங்கிடும் பெலன் தந்தீர் நன்றி
தப்பிச் செல்ல வழி செய்தீர் நன்றி – நடந்ததெல்லாம்
6.
விசுவாசப்புடமிடமிட்டீர் நன்றி
பொன்னாக விளங்கச் செய்தர் நன்றி – நடந்ததெல்லாம்
7.
கசப்புக்களை மாற்றி விட்ட்டீர் நன்றி
மன்னிக்கும் மனம் தந்தீர் நன்றி – நடந்ததெல்லாம்